search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுபாட்டில்கள் கடத்தல்"

    கடலூரில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுவையில் இருந்து காரில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த 2 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
    கடலூர்:

    கடலூர் மது விலக்கு போலீசார் இன்று அதிகாலை ஆல்பேட்டை சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கார் ஒன்று வேகமாக வந்தது. போலீசார் அந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினர்.

    காருக்குள் அட்டைப் பெட்டிகள் இருந்தன. சந்தேகம் அடைந்த போலீசார் அதனை பிரித்து பார்த்தனர். உள்ளே மதுப்பாட்டில்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதனை தொடர்ந்து போலீசார் காரில் இருந்த 2 வாலிபர்களையும் பிடித்து மதுவிலக்கு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து நடத்திய விசாரணையில் அவர்கள் சிதம்பரம் பல்கலைக்கழகத்தில் படித்து வருவதும், வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

    இதையொட்டி அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து மது பாட்டில்களையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
    ஆலங்குடி அருகே மதுபாட்டில் கடத்திய வாலிபரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
    ஆலங்குடி:

    ஆலங்குடி அருகே உள்ள பரவாக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 33). இவர் மீது புதுச்சேரியில் இருந்து மதுபானங்கள் கடத்தி வந்தது உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. 

    இதையடுத்து குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், கலெக்டர் கணேசுக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் கணேஷ் உத்தரவிட்டார். 

    இதையடுத்து ஏற்கனே சிறையில் உள்ள குமாரிடம் அவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான ஆணையின் நகலை ஆலங்குடி போலீசார் வழங்கினர்.
    விழுப்புரம் அருகே புதுவையில் இருந்து சென்னைக்கு காரில் மதுபாட்டில்கள் கடத்திய டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #arrest

    விழுப்புரம்:

    புதுவையில் இருந்து தமிழகத்துக்கு மது கடத்துவதை தடுக்கும்பொருட்டு விழுப்புரத்தில் பல்வேறு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு விழுப்புரம் கோட்டக் குப்பம் சோதனை சாவடியில் போலீஸ் ஏட்டு பாஸ்கரன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தார்.

    இதில் சந்தேகம் அடைந்த போலீசார் காரை சோதனை செய்தபோது அதில் 6 அட்டை பெட்டிகள் இருந்தன. அதை திறந்து பார்த்தபோது புதுவையில் இருந்து கடத்தி வந்த 712 விலை உயர்ந்த மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து டிரைவரிடம் நடத்திய விசாரணையில் அவர் புதுவை மாநிலம் ருத்ராபாளையம் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 34) என்பதும், அவர் புதுவையில் இருந்து சென்னைக்கு மதுபாட்டில்களை காரில் கடத்தி செல்வதும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து காரையும், மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்து கோட்டக்குப்பம் மது விலக்கு போலீசாரிடம் ஒப் படைத்தனர். இவற்றின் மதிப்பு ரூ.8 லட்சம் ஆகும். கார் டிரைவர் ராமச்சந்திரனையும் போலீசார் கைது செய்தனர்.

    ×